MENU
  • முகப்பு
  • ஆலய விபரம்
    • ஆலய வரலாறு
    • நிகழ்ந்த அற்புதங்கள்
    • நிகழ்ச்சிகள்
  • திருவிவிலியம்
  • செபங்கள்
  • காட்சியகம்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • மறைக்கல்வி
  • Ministries
    • Don Bosco Kids Ministries
  • தொடர்பு
ஆலய சிறப்புகள்
  • நமது ஆலயத்தில் அன்னை மரியாளிடம் வேண்டி கேட்கும் வரங்களை அன்னை கனிவுடன் நிறைவேற்றுவார். குறிப்பாக கர்ப்பவதி பெண்கள் பலரின் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது.

  • நமது ஆலயத்தில் அமைந்துள்ள "கோவை கல்வாரி" மற்றும் "நற்கருணை நாதர்" ஜெப கோபுரத்தில் காணிக்கையாக்கப்படும் இறைவேண்டல்களுக்கு ஆண்டவர் கருணையோடு செவிசாய்த்து பலன் கொடுக்கின்றார் என்பதை உணர்ந்து வேறு சபை மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் தினமும் வருகை புரிந்து செபிக்கின்றனர்.

  • நமது ஆலயத்தில் கர்ப்பிணி பெண்கள் பலர் ஆரோக்கிய மாதாவின் காட்சியை கண்டிருக்கின்றனர்

ஜெபத்தின் அவசியம்

அன்பிற்கினியவர்களே கிறிஸ்துவ வாழ்வில் ஜெபம் என்பது ஆண்டவரோடு பேசுவதற்கும் ஆண்டவரோடு நாம் இணைந்து வாழ்வதற்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மிகச் சிறந்த அருள் கொடை ஆகும். ஏனெனில் நமது வாழ்வில் அனைத்து தருணங்களிலும் நாம் ஆண்டவரிடம் தொடர்பு கொள்ள உதாரணமாக அவரை மகிமைப்படுத்துவதற்கு, கடவுள் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவதற்கு, நாம் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு, நமது துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு, நல்ல தொழில்/வேலை பெற, வாழ்க்கை தேவைகள் நிறைவு பெறுவதற்கு நமக்கு உள்ள ஒரே வழி மற்றும் வலிமை வாய்ந்த ஆயுதம் ஜெபம் மட்டுமே.

நமது உள்ளத்தில் உள்ளதை நமது ஆண்டவரையும், நம்மையும் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. எனவே நமது வாழ்வின் அனைத்தையும் அறிந்த நாமும், ஆண்டவரும் உரையாடிக்கொள்ள ஜெபம் அன்றி வேறு எந்த வழியும் இல்லை. ஏனெனில் "எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.(பிலிப் 4:6-7)" என்று நமது ஆண்டவரின் வார்த்தைகளால் மட்டுமே நிரம்பப்பெற்ற நமது திருவிவிலியம் கூறுகின்றது.

எனவே நம் ஆண்டவருடன் என்றெண்டும் இணைந்து வாழ தினமும் என்று இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் ஜெபிப்போம், ஜெய வாழ்வு பெறுவோம்.

இறையாசிருடன்
பங்குத்தந்தை
அருட்திரு I. சைமன் பீட்டர்.


பல்வேறு ஜெபங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  • முகப்பு
  • திருவிவிலியம்
  • செபங்கள்
  • மறைக்கல்வி
  • தொடர்பு

St John Bosco Church © 2019. ALL RIGHTS RESERVED.    |    Powered By Wisdom Ministries