ST JOHN BOSCO CHURCH kavundampalayam Coimbatore diocese is a roman catholic church and which is the only church in the diocese of St John Bosco as patron saint, sunday Tamil mass in this church is very popular in the surrounding.

ஆண்டவர்
இயேசு கிருஸ்து

செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. (1 குறிப்பேடு 29:12

திரு.
விவிலியம்

விவிலியம் பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. ((சங்கீதம் 19:10)

பாப்பரசர்
பிரான்சிஸ்

மக்களே! எக்காலத்திலும் ஆண்டவரையே நம்புங்கள்;அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம் (திருப்பாடல் 62:8)

மேதகு
கோவை ஆயர்
தாமஸ்
அக்வினாஸ்

உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். (திருப்பாடல் 37:5)
   


அன்புடன் வரவேற்கின்றோம்

இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இணையில்லா நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்கின்றோம். நமது ஆலயம் பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி தெரிந்துகொள்ள நமது இந்த இணைய பக்கம் மிகவும் உதவியாக இருக்கும்.

இறையாசிருடன்
பங்குத்தந்தை
அருட்திரு.ATS .கென்னடி

இந்த வாரம்
நமது ஆலய திருப்பலி மற்றும் நிகழ்வுகள்

ஆலய சிறப்புகள்

  • நமது ஆலயத்தில் அன்னை மரியாளிடம் வேண்டி கேட்கும் வரங்களை அன்னை கனிவுடன் நிறைவேற்றுவார். குறிப்பாக கர்ப்பவதி பெண்கள் பலரின் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது.

  • நமது ஆலயத்தில் அமைந்துள்ள "கோவை கல்வாரி" மற்றும் "நற்கருணை நாதர்" ஜெப கோபுரத்தில் காணிக்கையாக்கப்படும் இறைவேண்டல்களுக்கு ஆண்டவர் கருணையோடு செவிசாய்த்து பலன் கொடுக்கின்றார் என்பதை உணர்ந்து வேறு சபை மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் தினமும் வருகை புரிந்து செபிக்கின்றனர்.

  • நமது ஆலயத்தில் கர்ப்பிணி பெண்கள் பலர் ஆரோக்கிய மாதாவின் காட்சியை கண்டிருக்கின்றனர்

திருப்பலி மற்றும் ஆலய நிகழ்ச்சி விவரங்கள்

☛ ஞாயிறு திருப்பலி
✔ முதல் திருப்பலி - காலை 6.30 மணிக்கு
✔ இரண்டாம் திருப்பலி - காலை 8.30 மணிக்கு
☛ வார நாட்களில் திருப்பலி
✔திங்கள், செவ்வாய், புதன், வியாழன் - காலை 6.30 மணிக்கு
✔ வெள்ளி - மாலை 6.30 மணிக்கு திருப்பலியும் இறை இரக்க ஆண்டவர் வழிபாடும் நடைபெறும்
✔ சனிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு
✔ திருப்பலிக்கு பின்பு புனித ஆரோக்கிய மாதா வேண்டுதல் தேர் பவனி
✔ புனித ஆரோக்கிய மாதா நவநாள் வழிபாடு
☛ மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை
✔ புனித ஜான் போஸ்கோ நவநாள் காலை 9.30 மணிக்கு (இரண்டாம் திருப்பலிக்கு பின்பு) ஆரம்பிக்கப்படும்
✔ தொடர்ந்து தேர் பவனி நடைபெறும்
☛ மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை
✔ ஞானஸ்நானம் : காலை 9.30 மணிக்கு
☛எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும்
✔ நேரம் : காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
☛ மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை
✔ இரண்டாம் திருப்பலி (காலை 8.30 மணி) நமது மறைக்கல்வி குழந்தைகளுக்காக நிறைவேற்றப்படும்
♥ நமது பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் கட்டாயம் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்
♥ மறைகல்வி வகுப்பில் கலந்து கொள்ளாத குழந்தைகளுக்கு நமது பங்கில் எந்த சலுகையும் கிடைக்காது

ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்

நான்சி ஜோசப் நமது ஆலயத்தில் மாதவிடம் வேண்டி என் கணவருக்கு வெளிநாட்டில் எதிர் பாராத நல்ல வேலை கிடைத்தது