ஆலய அற்புதத்தின் சாட்சிகள்

நான்சி ஜோசப் நமது ஆலயத்தில் ஆரோக்கிய மாதாவிடம் வேண்டி என் கணவருக்கு வெளிநாட்டில் எதிர் பாராத நல்ல வேலை கிடைத்தது. ஆரோக்கிய மாதாவிற்கு கோடானு கோடி நன்றி.....

குடும்ப தலைவர் எனது மகனுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. நமது ஆலயத்தில் மாதவிடம் ஜெபம் பண்ணி வேண்டிய பின்பு மாதாவின் அருளால் ஒரு வருடத்திற்குள் எனக்கு ஒரு பேரன் பிறந்தான்...

பிலோமினால் எனது மகன் தீவிர சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தான். அப்பொழுது ஆண்டவரிடமும், நமது மாதவிடம் வேண்டியபொழுது சுலபமாக மருத்துவ செலவிற்கு எதிர்பாராத பண உதவி கிடைத்து ஆச்சரியமாக மூன்றே நாளில் குணமடைந்து வீடு திரும்பினான். ஆரோக்கிய மாதாவிற்கு ஸ்தோத்திரம்...

மணிகண்டன் எனக்கு சர்க்கரை நோய் முற்றி எனது கால் பாதிப்படைந்து எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த வேளையில் நான் எனது குடுப்பத்துடன் ஜான் போஸ்கோ ஆலயத்திற்கு வந்து ஆரோக்கிய மாதவிடம் உருக்கமாக வேண்டினோம். சில நாட்களிலே எனது கால்கள் நன்கு குணமடைந்துவிட்டது. ஆரோக்கிய மாதாவிற்கு பலகோடி நன்றிகள்......

குடும்ப தலைவி எங்கள் உறவினர் ஒருவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தார். மருத்துவர்கள், அவர் மூன்று நாள் மட்டுமே இருப்பார் என்றனர். எங்கள் ஆலயத்தில் உள்ள அனைத்து மக்களும் கூட்டு பிராத்தனை செய்தோம். ஆண்டவரின் அருளால் பூரண குணமடைந்து தற்பொழுது நலமாக உள்ளார். ஆண்டவருக்கே ஸ்தோத்திரம்...

முருகன் எனது மகன் பிறந்த ஆறு மாதம் முதல் காய்ச்சல் வருபொழுது எல்லாம் வலிப்பு நோயினால் அவதிப்பட்டான். ஒரு முறை கடுமையான காய்ச்சல் இருக்கும்பொழுது இந்த ஆலயத்தை பற்றி அறிந்து இங்கு வந்து மாதவிடம் வேண்டி எனது மகன் நெற்றியில் சிலுவை ஆடையளாம் இட்டேன். உடனடியாக காய்ச்சல் நீங்கி எனது மகன் குணமடைந்தான். நன்றி மாதாவே.......

பலூன் வியாபாரி எனது மகன் நடக்க மற்றும் பேசமுடியாமல் இருந்தான். இந்த ஆலயத்தில் இயேசுவிடம் மன்றாடி வேண்டி பூரண குணமடைந்து இப்பொழுது நன்றாக உள்ளன். இயேசுவுக்கே புகழ்...

குடும்ப தலைவிr எனது மகன் பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மிகவும் அபாயகரமான நிலையில் இருந்தபொழுது நமது ஆலயத்தில் மாதவிடம் வேண்டி எங்கள் பங்குத்தந்தை மருத்துவமனைக்கு வந்து ஜெபித்தார். ஆரோக்கிய மாதாவின் அருளினால் எனது மகன் பூரண குணமடைந்து நலமாக உள்ளன். எனது குடும்பம் என்றென்றும் ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.