ஆலய வரலாறு

கோயம்பத்தூர் மறை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள நமது புனித ஜான் போஸ்கோ ஆலய வரலாறு

1975ம் வருடத்தில் சீனிவாசா நகரில் இருந்த அரசுக் குடியிருப்பில் குடியேறிய மக்களில் இருந்த 10 கத்தோலிக்க குடும்பங்களுக்காக இந்நகரில் ஒரு சிறிய வீட்டில்( (தாசில்தார் வீடு) தாடிவைத்த பாதர் என்று அன்று செல்லமாக அழைக்கப்பட்ட அருட்திரு.அருள் இருதயராஜ் அடிகளார், வாரம் ஒருமுறை திருப்பலி நிறைவேற்றுவார். அவர் கோவை மறைமாவட்ட பல்நோக்கு சபையின் இயக்குனராக இருந்தார். கோவை ஆயர் இல்லத்தில் தங்கி இருந்தார். அப்போதைய ஆயர் மேதகு.விசுவாசம் ஆண்டகை அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க, தன்னுடைய இயக்குநர் பொறுப்போடு இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றி மக்களின் ஆன்மப் பணியையும் செய்து வந்தார்.

1976 ம் ஆண்டு இப்போழுது ஆலயம் உள்ள இடத்தை விலைக்கு வாங்க எடுத்த முயற்சி முடியும் தருவாயில் தந்தை அவர்கள் மாற்றலாகிச் சென்றுவிட்டார்.

1976 முதல் 1978 ம் ஆண்டு வரை N..G.G.O காலனியில் பங்குத் தந்தையாக இருந்த அருட்திரு.உபகாரம் மரிய சேவியர் அடிகளார் காந்திஜி ரோடு அருகில் (தற்சமயம் துளசி பார்மஸி எதிரில்) இரண்டு கடைகளை வாடகைக்கு அதில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

இப்போதுள்ள இடத்தை 28.7.1978 ம் தேதி மேதகு.விசுவாசம் ஆண்டகை ஆயரின் ஆசீரோடு அருட்திரு.உபகாரம் மரிய சேவியர் கிரயம் செய்து, இந்த இடத்தில் ஒரு சிறி;ய ஆங்கிலப் பள்ளி கட்டி, அதில் ஞாயிறு தோறும் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.இது 1983 மே மாதம் வரை தொடர்ந்தது.அதன் பிறகு பல குருக்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.

கவுண்டம்பாளையம் N..G.G.O காலனியின் கிளைப் பங்காகவே இருந்து வந்தது....

 • 1983 முதல் 1986 வரை... அருட்திரு.சுந்தர் ராஜ் அடிகளார்.

 • 1986 முதல் 1989 வரை... அருட்திரு.ஜோசப் தனராஜ் அடிகளார்.

 • 1989 முதல் 1996 வரை.. அருட்திரு.அந்தோணிமுத்து அடிகளார்.

 • இவரின் கடின முயற்சியால் தற்;போதைய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 1.5.1996 ம் ஆண்டு வெள்ளிக் கிழமை அன்று நடந்த சிறப்புத் திருப்பலியில் கோவை ஆயர். மேதகு.அம்புரோஸ். ஆண்டகை அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

 • 1996 ஜுன் மாதம் முதல் கவுண்டம்பாளையம் தனிப்பங்காக உயாத்தப்பட்டது.

 • முதல் பங்குத்தந்தையாக அருட்திரு.ஜான் போஸ்கோ நியமிக்கப்பட்டார்.

 • 1997 வரை அவரே பங்குத் தந்தையாகத் தொடர்ந்தார்.

 • 1997 முதல் 2001 வரை... அருட்திரு.ஜார்ஜ் தனசேகர் அடிகளார்.

 • 2001 முதல் 2003 வரை அருட்திரு.இயேசு.ஆல்பர்ட் நெல்சன் அடிகளார்.

 • 2003 முதல் 2006 வரை அருட்திரு.துரை வில்லியம் அடிகளார்;.

 • 2006 முதல் 2007 வரை அருட்திரு.மரிய அன்டனி அடிகளார்.

 • 2007 முதல் 2013 வரை அருட்திரு.ஜான் சேவியர் அடிகளார்.

 • 2013 முதல் 2014 வரை அருட்திரு.அலெக்ஸாண்டர் செல்வநாயகம் அடிகளார்.

 • 2014 முதல் மே 2014 வரை அருட்திரு.பயஸ் சவரிமுத்து அடிகளார்.

 • 2014 முதல் தற்போதுள்ள பங்குத் தந்தை .அருட்திரு.இ.சைமன் பீட்டர் அடிகளார்; தொடர்கின்றார்....

read more